இலங்கையில் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள Huawei

உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரும், நம்பர் வன் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமுமான Huawei, அதன் புத்தம் புதிய Nova 8i கையடக்கத் தொலைபேசியுடன் மேலும் பல புத்தாக்க சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் Huawei யின் இலங்கைக்கான முகாமையாளர் Chris Cai, கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஸ்மார்ட்போனை இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். புத்திசாலித்தனம், இணையற்ற மின்கல ஆயுள், பலம் வாய்ந்த கெமரா செயல்திறன் ஆகிய உயரிய அம்சங்களுடன், நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க இது அவர்களுக்கு உதவும்." என்றார்.

Nova தொடரில், 6.67 அங்குல விளிம்பற்ற Huawei edgeless திரை, 8GB RAM + 128GB உள்ளக நினைவகம், 64MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா, 2MP depth கெமரா ஆகிய AI குவாட் (நான்கு) கெமரா அமைப்பானது, அனைத்து சிறந்த தருணங்களையும் தெளிவாகப் படம் பிடிக்க உதவுகின்றது.

Huawei Nova 8i ஆனது noise-reducing algorithm கட்டமைப்பு மூலம் எவ்வேளையிலும் அழகான இரவுக் காட்சிகளைப் படம்பிடிக்க உதவுகிறது.

4,300mAh பாரிய மின்கலமானது, மின்கல சேமிப்பு AI அல்கரிதம் செயற்பாடுடன் தொடர்பை பேணி, ஒரு நாள் முழுவதும் நீடித்த மின்கலத்தை வழங்குகிறது. புதிய Huawei Nova 8i உடன், Huawei Watch GT 3 மற்றும் Huawei MateBook D 15 போன்ற புதிய தயாரிப்புகளும் இதனுடன் இணைந்தவாறு அறிமுகப்படுத்தப்படுகிறது.

Huawei Nova 8i ஆனது வெள்ளி (Moonlight Silver), நீலம் (Interstellar Blue), கறுப்பு (Starry Black) ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.

 

Tue, 02/22/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை