திறன்மிக்க நிலையான இலங்கைக்காக CDB Advance Roof Solar திட்டம் அறிமுகம்

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பி.எல்.சி (CDB) சூழலுக்கு நட்பான வலு நிதி வழங்கல் பிரிவில் தனது புதிய நிலைபேறான முதலீட்டுத் தீர்வாக CDB Advance Roof Solar என்பதை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தீர்வுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கையில் நிலைபேறான செயற்பாடுகளை பின்பற்றுவதை அதிகரிக்கும் இலக்குடன், அதிகளவு நிலைபேறான வழிமுறைக்கு மாறுவதற்கு ஊக்குவிக்கும் தனது முயற்சிகளை CDB துரிதப்படுத்தியுள்ளது.

CDB Advance Roof Solar இனால் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக மதிநுட்பமான, சுயநிலைபேறான வலு மூலத்துக்கு மாறிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், மேலதிக வருமானத்துடன், எவ்விதமான மின்சாரக் கட்டணங்களையும் செலுத்த வேண்டிய தேவையும் இல்லாமல் செய்யப்படும். நவீன சூரிய மின்சக்தி தொழில்நுட்பம் மற்றும் விற்பனைக்கு பின்னரான பராமரிப்புடன், பரிபூரண நிதியளிப்பு வசதியை CDB இடமிருந்து பெற்றுக் கொள்வதனூடாக வாடிக்கையாளர்கள் பரிபூரண தீர்வைப் பெறுவதுடன், வருமானத்தை கண்காணிப்பதற்கான விசேட கட்டமைப்பை அணுகும் வசதியையும் பெறுவார்கள்.

மேலும், CDB Advance Roof Solar இனால் அதிகளவு மதிநுட்பமான மற்றும் சுயதன்னிறைவான வாழ்க்கை முறை ஊக்குவிக்கப்படுகின்றது. எளிமையான பொருத்துகை செயன்முறையுடன், உங்கள் வீட்டு வாயிலில் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய சேவையை பெற்றுக் கொடுப்பது இலக்காக அமைந்துள்ளது. விசேடமாக CDB Advance Roof Solar வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சௌகரியமான நிதி வழங்கல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பான செயன்முறையை விளக்கமளிப்பதற்கு CDB இன் முறையாக பயிற்சிகளைப் பெற்ற அணி அங்கத்தவர்கள் தயாராக உள்ளனர்.

இந்தத் திட்டம் தொடர்பாக CDB இன் பிரதம நிதி அதிகாரி தமித் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிலைபேறான நிகழ்ச்சி நிரலில் சமூக மற்றும் சூழல்சார் அம்சங்கள் அடங்கியுள்ளன. ரூ. 100 பில். சொத்துக்களைக் கொண்ட நிறுவனம் என்பதிலிருந்து, ட்ரில்லியனின் கால் பங்கு சொத்துக்களைப் படைத்த நிறுவனமாக மாறும் பயணத்தில், குறைந்தளவு காபன் வெளியீட்டை கொண்டிருப்பதற்கும் எமது காபன் நடுநிலை கொள்கையை தக்க வைத்துக் கொள்வதிலும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். சமூகத்தில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனமாகத் திகழ்வதனூடாக, நிதிசார் உள்ளடக்கத்தை உறுதி செய்து, சூழலுக்கு நட்பான பொருளாதாரத்துக்கு நாம் தொடர்ந்தம் பங்களிப்பு வழங்குவோம்” என்றார்.

7ஆவது ஐக்கிய நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்கான 'தூய வலு' என்பதை எய்துவதற்கு உதவும் வகையில் நிறுவனத்தின் முயற்சிகள் அமைந்துள்ளன. 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் வலுவில் 70 சதவீதமானவை புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதற்கான அர்ப்பணிப்பில் CDB தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், CDB Roof Solar இனால் இந்த இலக்கு எய்தப்படுவதற்கு பங்களிப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தினூடாக தமது கூரைகளில் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புகளைப் பொருந்தியுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, மேலதிகமாக பிறப்பிக்கும் மின்சாரத்தை பிரதான மின்வழங்கல் கட்டமைப்புக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டளவில் 1000 Mw சூரிய வலுப் பிறப்பாக்கலை எய்துவதற்கு இந்தத் திட்டம் எதிர்பார்த்துள்ளது.

CDB Advance Roof Solar என்பது திறன்மிக்க நிலையான ஓர் இலங்கையை வலுவூட்டுவதில் கவனம் செலுத்தும் நிலைபேறான நிதியளிப்பை முன்னெடுத்துச் செல்லும் CDB இன் உயர்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ளது. நிலைபேறான வலு உற்பத்தி மற்றும் சூழலுக்கு நட்பான போக்குவரத்து தீர்வுகளுக்கு இது ஆதரவளிக்கின்றது. CDB Advance Roof Solar பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு www.cdb.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

பொதுப்பட்டியலிடப்பட்ட கூட்டாண்மை முன்னோடி நிறுவனமாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்வதுடன், இலங்கையில் இயங்கும் சிறந்த வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் ஐந்து மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. நாடளாவிய ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படும் முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இயங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.cdb.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Fri, 02/18/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை