அரச வைத்திய அதிகாரிகள் பேரவை கடும் கண்டனம்

துணை மருந்தாளர்கள் ஆரம்பித்துள்ள அரசியல் தொழிற்சங்க போராட்டம் காரணமாக நோயாளிகளை கஷ்டத்திற்குள்ளாக்கக் கூடாதென அரச வைத்திய அதிகாரிகள் பேரவை தெரிவித்துள்ளது.

துணை மருந்தாளர்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்து கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் பேரவையின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன, நாடு தற்போது காணப்படும் நிலைமையில் நோயாளிகளை சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்றார்.

கடந்த சில காலங்களாக சுகாதாரத் துறையில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தத்தை வன்மையாக கண்டித்து கருத்து தெரிவித்த அவர் மேற்கொண்டு தெரிவித்ததாவது.

"நான் எங்கிருந்தாலும் நோயாளிகளின் தரப்பிலேயே இருப்பேன். நோயாளிகளுக்காகவே இந்த சேவையை மேற்கொள்கிறோம். மக்களின் பணத்தின் மூலமே இதனை மேற்கொள்கிறோம். வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டிருப்பது ரவி குமுதேசின் பணத்தால் அல்ல.

நான் அமர்ந்திருக்கும் உத்தியோகபூர்வ அறையின் மேசை, நாற்காலி போன்ற அனைத்தையும் பெற்றுக் கொடுத்திருப்பது டொக்டர் ரவி குமுதேஷோ, சுகாதார சேவை செயலணியோ அல்ல. இந்நாட்டின் பொது மக்களே பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அவ்வாறென்றால் நான் பொது மக்களுக்காகவே முன்னிலையாக வேண்டும். பொதுமக்களுக்காக சேவை செய்ய எனக்கு இடம் தேவை இல்லை. பாதையிலே கூட செய்வேன். வீட்டிலும் செய்வேன் வைத்தியசாலையிலும் செய்வேன். ஒழுக்க விசாரணை நடவடிக்கை எடுப்பது என்றால் அதனை சுகாதார துறை செயலாளரே மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறை செயலாளர் எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவரும் தொழில் சங்கத்தை சேர்ந்தவராக மாறி பொதுமக்களுக்கு எதிராக உள்ளார் என்ற காரணத்தினாலாகும்.

டொக்டர் ரவி குமுதேஷ் பொதுமக்களையும் தங்களுடைய தொழில் சூழ்ச்சியையும் குழப்பிக் கொண்டுள்ளார் என எண்ணுகிறேன். அதனை அவர் திருத்திக் கொண்டால் தொழிற்சங்க போராட்டத்தை வெற்றி கொள்ளும் அறிவு கிடைக்கும் என நான் நினைக்கிறேன் " என தெரிவித்தார்.

Thu, 02/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை