மாவைக்கு கொவிட் தொற்று உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு  கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதன் பின்னர், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.விசேட நிருபர்

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை