சுதந்திர தினத்திற்கு அமெரிக்கா வாழ்த்து

இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்கா சார்பில் தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இலங்கையும் நட்புறவு மற்றும் பங்காளித்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.

கடந்த ஆண்டில், அமெரிக்காவும் இலங்கையும் கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு பதிலளிக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயற்பட்டுள்ளன.

இலங்கையின் கொவிட்-19 தாக்கத்துக்கு எதிரான ஆதரவாக உயிர்காக்கும் தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கியது. நமது அரசாங்கங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது நாடுகளிலும் உலகெங்கிலும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் இணக்கமான உறவுகளை அதிகரிக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளார்.

 

 

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை