நியாண்டர்தோலுடன் மனிதன் வாழ்ந்ததற்கு புதிய ஆதாரம்

நவீன மனிதன் ஆபிரிக்காவில் இருந்து வந்த விரைவிலேயே நியாண்டர்தோல் மனித இனம் அழிந்துவிட்டதாகக் கூறப்படும் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கும் புதிய புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தெற்கு பிரான்ஸில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குழந்தையின் பல் மற்றும் கற்களாலான கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்கள் இருந்ததை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது முன்னர் நம்பப்பட்டதை விடவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப் பகுதியில் மனிதன் இருந்ததற்காக ஆதாரமாக உள்ளது. இது ஹோமோ சேபியன் மற்றும் நியாண்டர்தோல் இரு இனமும் நீண்ட காலம் இணைந்து வாழ்ந்திருப்பதை காட்டுகிறது.

இது பற்றிய ஆய்வு அறிக்கை ஜெர்னல் நேச்சர் அட்வான்சஸ் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

மனித இனத்தின் ஆதி உறவினர்களாக கருதப்படும் இந்த நியாண்டர்தோல் மக்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Fri, 02/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை