நாட்டிலேயே தங்கி இருக்க உக்ரைன் ஜனாதிபதி முடிவு

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தொடர்ந்து நாட்டிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

அவரும் அவரது குடும்பத்தினரும் ரஷ்யப் படையினரின் முதன்மையான இலக்காக இருக்கும்போதும் செலென்ஸ்கி அவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் வெளிநாட்டுத் தலைவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் நேட்டோவின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகத் செலென்ஸ்கி கூறினார். 

பாதுகாப்புக் கூட்டணியினர் உக்ரைனுக்குள் வந்து உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் எவரும் அவ்வாறு உதவ முன்வருவதைப் பார்க்க முடியவில்லை என்று செலென்ஸ்கி கூறினார்.

சண்டையிடுவதற்காக உக்ரைனுக்குப் படையினரை அனுப்பப் போவதில்லை என்று நேட்டோ திரும்பத் திரும்பக் கூறிவந்தது. கூட்டணி வசமுள்ள கிழக்குப் பகுதிக்குக் கூடுதல் படையினரை அனுப்பிவைக்கப் போவதாக மட்டும் அமெரிக்கா கூறியிருந்தது.

Sun, 02/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை