சமையல் எரிவாயு சிலிண்டரில் திடீர் தீ

பேராதனையில் அதிகாலை சம்பவம்

கண்டி- பேராதனை- உட பேராதனை பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றில் தீ பரவியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை எரிவாயு அடுப்பை செயற்படுத்திய போது சிலிண்டரில் திடீரென தீ பரவியுள்ளது.

இதையடுத்து, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறித்த வீட்டினர் தெரிவித்துள்ளனர்.

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை