அமரர் எஸ்.டி. சிவநாயகம் நினைவு முத்திரை இன்று வெளியீடு

இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலகில் தலைசிறந்தவர்களாகப் போற்றப்படுவோரில் ஒருவரும், சத்திய சாய் பாபா மத்திய நிலைய ஸ்தாபகருமான அமரர் எஸ்.டி. சிவநாயகத்தின் நூறாவது பிறந்த நாள் இன்றாகும். எஸ்.டி. சிவநாயகம் நூற்றாண்டு நிகழ்வுகளின் முன்னோடியாக எஸ்.டி.சிவநாயகம்  ஞாபகார்த்த முத்திரை இன்று 16-ஆம் திகதி புதுச்செட்டிதெரு சாய் மத்திய நிலையத்தில் வெளியிட்டு வைக்கப்படுகின்றது. ஊடகத்துறை அமைச்சர் டக்ளஸ் அழகப்பெருமவின் பணிப்புரையின் பேரில் இலங்கை முத்திரைப் பணியகம் நினைவு முத்திரையை வெளியிடுகின்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வெ. இராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் மூத்த பத்திரிகையாளர் எச்.எச்.விக்கிரமசிங்க அண்மையில் ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை சந்தித்து அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் நினைவு முத்திரையை வெளியிடுமாறு கோரியிருந்தார்.

Wed, 02/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை