பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

UGC இணையத்தளத்தில் பார்வையிடலாம்

உயர்தரப் பரீட்சை 2020இன் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம்.

40,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள்  வெளியான பின்னர், இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

 

 

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை