நெருக்கடி நிலையை தீர்க்க ஒத்துழைப்பு வழங்கத் தயார்

திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கம்பளை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண்பதற்காக அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்.   அதேபோன்று அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாகவோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதோ எமது நோக்கமல்ல.

எவ்வாறெனினும் நாட்டு மக்களுக்காக அந்த அர்ப்பணிப்பை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

அரசாங்கமானது தமக்கு எல்லாம் தெரியும் என்ற நோக்கிலேயே செயற்பட்டு வருகிறது. அந்த நிலையில் நாம் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அதனை நிராகரித்து வருகிறது. நாம் பல தடவைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளோம் என்றார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Mon, 02/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை