லிதுவேனிய நாட்டிடம் இறைச்சி கொள்வனவை நிறுத்தியது சீனா

தாய்வானுடன் உறவை எற்படுத்தி உள்ள லிதுவேனியாவிடம் இருந்து மாட்டிறைச்சி, பால் உற்பத்திகள் மற்றும் பியர் கொள்வனவை சீனா நிறுத்தியுள்ளது.

போதிய ஆவணங்கள் இல்லாததை காரணம் காட்டியே சீன சுங்க பொது நிர்வாகம் இந்த ஏற்றுமதிகளை இடை நிறுத்தி இருப்பதாக லிதுவேனியா குறிப்பிட்டுள்ளது.

தாய்வானுக்கு பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றை தனது நாட்டில் திறக்க லிதுவேனிய அனுமதி அளித்திருக்கும் நிலையிலேயே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் தனது உறுப்பு நாடு மீது சீனா பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவுக்கு எதிரான விசாரணை ஒன்றை தற்போதைய சூழல் வலுப்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இறைச்சி இறக்குமதியாளராக சீனா இருந்த போதும் லிதுவேனியாவிடம் இருந்து குறைந்த அளவு இறைச்சியையே அது வாங்குகிறது.

Sun, 02/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை