மிகச் சிறந்த சேவை வழங்கும் வியாபார குறியீடாக செலிங்கோ லைஃப் தெரிவு

 இலங்கையின் கீர்த்திமிக்க சந்தைப்படுத்தல் நிறுவனம் நடத்திய மிகச் சிறந்த செயற்பாடுகளுக்கான Excellence Awards விருது வழங்கும் விழாவில் செலிங்கோ லைஃப் நிறுவனத்துக்கு மிகச் சிறந்த சேவை வழங்குனர் விருது வழங்கப்பட்டுள்ளது. சகல பிரிவுகளுக்குமான மிகச் சிறந்த சேவை விருது என்ற உச்சத்தை செலிங்கோ லைஃப் தொட்டுள்ளது. அத்தோடு கோலாகலமான இந்நிகழ்வில் வழங்கப்பட்ட மிகச் சிறந்த ஐந்து விருதுகளில் ஒன்றையும் அது வென்றுள்ளது.இலங்கையின் ஆயுள் காப்புறுதித் தலைவர் எட்டு விஷேட விருதுகள் பிரிவில் இரண்டு தங்கம் விருதுகளையும் வென்றுள்ளது. ‘மிகச்சிறந்த புதிய வியாபார குறியீட்டு நாமம்’ என்ற விருதை தனது ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்துக்காக செலிங்கோ லைஃப் வென்றுள்ளது.

வருடத்தின் மிகச் சிறந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்பு வியாபார குறியீட்டு நாமம் பிரிவில் வெள்ளி விருதையும், வென்றுள்ளதன் மூலம் 2021ன் மதிப்பு மிக்க மூன்று விருதுகள் வெல்லப்பட்டுள்ளன.

மிகச் சிறந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்பு வர்த்தக முத்திரை விருதை செலிங்கோ லைஃப் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றுள்ளது.

 

Tue, 02/22/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை