பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தின் நான்கு ஊழியர்கள் இராஜினாமா

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகத்தைச் சேர்ந்த 4 முக்கிய ஊழியர்கள் பதவி விலகியுள்ளனர்.

கடந்த ஓராண்டாகத் தலைமை ஊழியர் பதவியை வகித்த டான் ரோசன்பில்ட் அவர்களில் ஒருவர்.

டவுனிங் ஸ்ட்ரீட்டில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தபோது, அலுவலக ஊழியர்களை வரவழைக்கும் மின்னஞ்சலை  அனுப்பியிருந்த ஜோன்சனின் மூத்த பிரத்தியேக செயலாளர்  மார்டின் ரேய்னால்ட்ஸும் பதவி விலகியுள்ளார்.

இணைப்பு பணிப்பாளர் ஜக் டொய்லும் கொள்கை பிரிவின் தலைவர் முனிரா மிர்ஸாவும் அவ்வாறே செய்துள்ளனர்.

மிர்ஸா, 2008இல் ஜோன்சன் லண்டன் மேயராக இருந்தது முதலே, அவருடன் பணியாற்றி வந்தவர்.

அவரது பதவி விலகல் அரசாங்கம் சீர்குலைவதற்கான அறிகுறி என்று, ஜோன்சனின் முன்னாள் மூத்த அதிகாரி டொமினிக் கம்மிங்ஸ் சாடினார்.

பிரிட்டனில் முடக்கநிலையின்போது டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காகத் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துவருகிறது.

Sun, 02/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை