இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

அத்தியாவசிய, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்திய அரசின் தலையீட்டுடன், இந்தியன் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார்.

பசில் ராஜபக்ஷவுடன், தானும் இந்தியா செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Fri, 02/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை