ரயானின் இறுதிக் கிரியையில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு

மொரோக்கோவில் ஆழ்துளை கிணற்றில் நான்கு நாட்கள் சிக்கி இருந்த நிலையில் உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் ரயானின் இறுதிக் கிரியையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடந்த பெப்வரவரி 01ஆம் திகதி 32 மீற்றர் ஆழமான கிணற்றில் விழுந்த ரயானை மீட்க தீவிர முயற்சிகள் இடம்பெற்றபோதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் அவதானத்தைப் பெற்றது.

இந்த சம்பவம் நடந்த தனது சொந்த ஊரில் கடந்த திங்கட்கிழமை ரயான் அவ்ரமின இறுதிக் கிரியை இடம்பெற்றது. இதில் பெரும் மக்கள் திரண்டதால் மலை உச்சியில் இருக்கும் அடக்கஸ்தலத்தில் போதுமான இடம் இருக்கவில்லை.

'எனக்கு 50 வயதுக்கு மேலாகிறது. இறுதிச் சடங்கு ஒன்றில் இத்தனை பேரை நான் பார்த்ததில்லை. ரையான் எம் அனைவரது புதல்வன்' என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Wed, 02/09/2022 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை