சுகாதாரத்துறை ஊழியர்கள் பலருக்கும் கொரோனா உறுதி

கொழும்பு பெரியாஸ்பத்திரியில் மட்டும் 150 பேருக்கு அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவிப்பு

நாடளாவிய அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் தாதியர் மற்றும் உத்தியோகத்தர்கள் பெருமளவிலானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்  தலைவர் சமன் ரத்னபிரிய நேற்று அது தொடர்பில் தெரிவிக்கையில்: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 150 தாதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தை வைத்தியசாலையில் 20 தாதியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் களுபோவில, ராகம உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெருமளவு பணியாளர்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்வேறு வைத்தியசாலைகளிலும் பணி புரியும் தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் தற்போதைய சூழ்நிலைக் கிணங்க உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்பில் ஏமாற வேண்டாம் என்றும் மிக விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை