சிவில் விமானங்களுக்கு உக்ரைன் ‘வான் பூட்டு’

ரஷ்யாவின் படை நடவடிக்கையை அடுத்து சிவில் விமானங்களுக்கு உக்ரைன் தனது வான் பகுதியை நேற்று மூடியது. உக்ரைனுக்கு மேலால் பறக்கும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படுவது அல்லது சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை வெளியானதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“உக்ரைன் வான் பகுதியில் சிவில் பயணங்களுக்கு விமானசேவைகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று உக்ரைன் அரச விமான போக்குவரத்து நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவும் கிழக்கில் தனது உக்ரைனுடனான எல்லையின் வான் பகுதியை விமானங்களுக்கு மூடியுள்ளது. எனினும் உக்ரைன் இந்த அறிவித்தலை விடுக்கும் முன்னரே, அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் விமானங்கள் கிழக்கு உக்ரைன் மற்றும் கிரிமியா வான் பகுதிகளை தவிர்க்க கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2014இல் கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் இருந்து 298 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை