நாட்டில் ஆயுதக் கலாசாரம் உருவாக ஜே.வி.பியே காரணம்

புலிகளுக்கு கற்றுக்கொடுத்ததும் அவர்களே

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே, என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித்த சேனாரட்ண குற்றம் சுமத்தினார்.

இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லையென ஜே.வி.பி சுமத்தி வரும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனைச் செய்யவில்லை. இந்த ஆயுதக் கலாச்சாரத்தையே பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்றுக்கொண்டார்.

1989ஆம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு மீண்டும் பாரிய அழிவை ஏற்படுத்தியது.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய தரப்பே இந்த ஜே.வி.பி.

அபிவிருத்தியடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஜே.வி.பி. குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Thu, 02/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை