நாடு முழுவதும் ஒரு இலட்சம் அபிவிருத்தி திட்டங்கள்

நாளை மறுதினம் காலை 8.52 மணிக்கு ஆரம்பம்

 

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வரவு செலவு திட்டத்தில்  ஒதுக்கீடு செய்திருந்த நிதி மூலம் சகல மாவட்டங்களிலும்  இந்த செயற்றிட்டம் ஆரம்பமாகிறது

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய கிராமத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 100,000 அபிவிருத்தித் திட்டங்கள் 3ஆம் திகதி காலை 8.52 மணிக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படுகிறது.

'பட்ஜெட்டில் இருந்து ஒரு லட்சம் வேலைத்திட்டங்கள் ' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டை, மக்களின் தேவைக்கேற்ப பயன்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. குறைந்த பட்சம் ஒரு கிராம சேவையாளர் பிரிவில் ஐந்து அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் "ஒரு இலட்சம் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் தேர்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர் கலந்துரையாடல்களை நடத்தினர். இதன்படி, மக்கள் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை விரும்புகிறார்கள், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கிராம மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அந்தத் திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் 3ஆம் திகதி (03) அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் சுப வேளைகளில் அந்தந்த தொகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பெசில் ராஜபக்‌ஷ இதற்கான நிதியை வரவு செலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கியிருந்தார். (பா)

Tue, 02/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை