எண்ணெய் விலை உச்சம்

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக பீப்பாய் ஒன்று சுமார் 102 டொலர்கள் அதிகரித்துள்ளது.

பிரண்ட் மசகு எண்ணெய் விலை 4.69 வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 101.93 டொலர்களாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எண்ணெய் விலை 100 டொலரை தாண்டி இருப்பது இது முதல் முறையாகும். இயற்கை வாயுவின் விலையும் 4.7 வீதம் உயர்ந்திருப்பதோடு தங்கம் விலை 1.82 வீதம் அதிகரித்து அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 1,931 டொலர் ஆனது.

ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான 30 முதல் 40 வீதமான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யா வழங்கி வருகிறது. உலகளவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 11 வீதத்தையும் ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு, மசகு எண்ணெய் பயன்பாட்டில் 60 வீதத்தையும் ரஷ்யா வைத்துள்ளது.

Fri, 02/25/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை