பொலிசாரின் டிப்பர்களிலும் மண் கடத்தல் சம்பவங்கள்

சிறீதரன் MP பகிரங்க குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிசார், இராணுவத்தினரின் துணையுடனேயே இடம்பெறுகிறது.

பொலிசாரின் டிப்பர் வாகனங்கள் கூட மணல் ஏற்றுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பல இடங்களில் மணல், கிரவல் சட்டவிரோதமாக அள்ளப்படுகிறது. பொலிசாரின் டிப்பர் வாகனங்களும் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மக்கள் சொல்கிறார்கள். அந்த வாகன இலக்கங்களையும் சொல்கிறார்கள்.

பல இடங்களில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை கடந்தே மணல் டிப்பர்கள் செல்கின்றன. எப்படி அவை செல்கின்றன.

மணல் அகழ்வு பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்கினால், தகவல் தந்தவர்களின் விபரங்களையும் பொலிசார் கடத்தல்காரர்களிற்கு வழங்கி விடுகிறார்கள் என தெரிவித்தார்.

Wed, 02/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை