இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து அமைச்சர் கெஹலிய விடுதலை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு தேவைப்படாத சந்தர்ப்பத்தில், மேம்மாட்டு செயற்றிட்டம் ஒன்றுக்காக 600 ஜி.ஐ. குழாய்களை கொள்வனவு செய்தமை ஊடாக அரசுக்கு 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த ஊழல் மோசடி வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமலசேன ரூபசிங்க மற்றும் கூட்டுத்தானத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகே ஆகிய மூவரையுமே இவ்வாறு விடுவித்து கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல நேற்று (15) உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறித்த வழக்கானது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 3 ஆணையாளர்களினதும் எழுத்துமூல அனுமதியின்றி தொடரப்பட்டுள்ளதாகவும், அதனால் மீள வழக்குத் தாக்கல் செய்யும் நிபந்தனையின் கீழ் வழக்கை வாபஸ்பெற அனுமதிக்குமாறும் இலஞ்ச ஊழல் விசரணை ஆணைக்குழுவினர் நீதிமன்றைக் கோரினர். இதனையடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Wed, 02/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை