அணுக்கரு பிணைப்பு: அதிக ஆற்றலை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி

அணுக்கரு பிணைப்பு தொழிநுட்பத்தின் மூலம் அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தியை கண்டறிவதில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அணுக்களை அதிக வெப்ப நிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள்  இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம் தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகா ஜூல் ஆற்றலை வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகளின் பலனாக 59 மெகா ஜூல் ஆற்றல் வெளிகொணரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. அறிவியலின் முன் நின்ற மிகப் பெரிய சவாலுக்கு தற்போது தீர்வை நெருங்கியுள்ளதாக இங்கிலாந்து அணுசக்தி ஆணையத்தின் தலைவர் இயன் சாப்மேன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் தற்போது பெட்ரோலியமே பிரதான எரிபொருளாக திகழும் நிலையில், அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

இந்நிலையில் சுற்றுசூழலை பாதிக்காத நடைமுறையில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய எரிபொருளை கண்டறியும் முயற்சி உலகெங்கும் நடந்து வரும் நிலையில் அணுக்கரு இணைவு மூலம் அதிக ஆற்றலை வெளிக்கொணர்ந்து உள்ளது மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பான அணுமின் உற்பத்தி முறையாகவும் கருதப்படுகிறது.    

Sun, 02/13/2022 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை