வரி நிவாரணமா விலை அதிகரிப்பா?

CPC நிதியமைச்சிடம் கோரிக்கை

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் நிவாரணம் வழங்குதல்  அல்லது எரிபொருள் விலையை அதிகரித்தல் இரண்டிலொன்றை மேற்கொள்ளுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதி அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதுதொடர்பில் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கையில், தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள சூழ்நிலையின் கீழ் தற்போதுள்ள விலையில் எரிபொருளை முன்னெடுக்க முடியாது என்றும் அதனால் பாரிய நட்டத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமக்கவேண்டியுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் நிதியமைச்சுக்கு தெரிவித்துள்ளது.

நிதி பற்றாக்குறை நிலவுமிடத்து எதிர்வரும் காலங்களில் டொலரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலை எதிர்கொள்ள நேருமென்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதுதொடர்பில் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிலையை கவனத்திற்கொண்டு எரிபொருளுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியில் நிவாரணம் வழங்குமாறும் அல்லது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதியமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வேண்டுகோள் தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் கூட்டுத்தாபனம் நிதியமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, IOC நிறுவனம் கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களுக்கான விலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை