ஆஸ்திரியா, ஜேர்மனியில் கொவிட் கட்டுப்பாடு தளர்வு

கொவிட்–19 தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தளர்த்தும் அறிவிப்பை ஆஸ்திரியா மற்றும் ஜேர்மன் நாடுகள் வெளியிட்டுள்ளன. தொற்றை கட்டுப்படுத்த கட்டாய தடுப்பூசி திட்டத்தை அமுல்படுத்தி சில வாரங்களிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையில் வரும் மார்ச் 20 ஆம் திகதி விடுதலை தினமாக ஜெர்மனி அறிவித்திருப்பதோடு வரும் மார்ச் 5 ஆம் திகதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் கைவிடப்படும் என்று ஆஸ்திரியா குறிப்பிட்டுள்ளது.

வேகமாகப் பரவக்கூடிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தாத நிலையில் ஐரோப்பாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஜெர்மனியில் வீட்டில் இருந்து வேலை புரிவது போன்ற அனைத்து பிரதான கட்டுப்பாடுகளும் மார்ச் 20 ஆம் திகதி ரத்துச் செய்யப்படவுள்ளது. எனினும் சமூக இடைவெளி மற்றும் உட்புறங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.

Fri, 02/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை