70 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்

யாழ்ப்பாணத்தில் 70 வயதில் நபர் ஒருவர் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70ஆவது வயதில் பட்டம் பெற்றதை அவரது மகன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.

“எனது தந்தை தனது 70ஆவது வயதில் MPA பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார்.

வைத்தியரான மகனின் முகநூல் பக்க பதிவை சிங்கள முக நூல் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான அவரை பாராட்டியுள்ளனர்.

எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளாரென பதிவிட்டுள்ளனர்.

Thu, 02/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை