பொருளியல் வினாத்தாளில் சிக்கலுக்குரிய 3 கேள்விகள்

குற்றச்சாட்டு குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணை

க.பொ.த உயர்தரப் பரீட்சை- 2021 பரீட்சையின் பொருளியல் -பகுதி ஒன்று வினாத்தாளில் சரியாக விடை வழங்க முடியாத ஐந்து வினாக்கள் உள்ளடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஆராயுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன  பணித்துள்ளார். இது தொடர்பில் நிபுணர் குழு ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வினாக்களை தயாரிப்பதில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக குழு கண்டறிந்தால், மாணவர்களுக்கு அதன் நன்மையை வழங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் பரீட்சைகள் நடைபெறும் போது தனியார் வகுப்புகளை நடத்தும் சில ஆசிரியர்களால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரம்- 2021 பரீட்சையின் பொருளியல்-1 வினாத்தாளில் 33, 34, 37, 49 மற்றும் 50 ஆகிய வினாக்கள் சரியான விடையளிக்க முடியாத வினாக்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. (பா)

Tue, 02/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை