நீர் மட்டம் மேலும் வீழ்ச்சி; 300 மெ.வோ மின்சாரம் இழப்பு

மத்திய மலையகத்தில் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர் மின் உற்பத்திக்கான காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் சுமார் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்கின்றன.

காசல்ரீ நீர்த்தேக்க அணை 155 அடி உயரம் கொண்டதுடன் அதன் நீர் மட்டம் 118 அடியாகக் குறைந்துள்ளது. கடந்த 15ஆம் திகதி காலை 6 மணியளவில் மவுசாக்கலை நீர்த்தேக்க அணையின் உயரம் 120 அடியாக இருப்பதுடன் நீர்மட்டம் 75 அடியாகக் குறைந்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

Thu, 02/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை