இரு வாகனங்களுடன் மோதிய முச்சக்கர வண்டி; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயம்

இரு வாகனங்களுடன் மோதிய முச்சக்கர வண்டி; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயம்-Accident-5 Injured Including 3 Children

- எரிபொருள் நிரப்ப திரும்பிய காருடனும், கெப் வாகனத்துடன் மோதி விபத்து

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதி, இலிங்க நகர் பகுதியில் எரிபொருள் (ஐஓசி) நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட ஐவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு வாகனங்களுடன் மோதிய முச்சக்கர வண்டி; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயம்-Accident-5 Injured Including 3 Children

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று (12)  நண்பகல் திருகோணமலை கண்டி வீதியினூடாக நகர் புரத்தை நோக்கி வருகைதந்த சொகுசு கார் ஒன்று திருகோணமலை ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வலது பக்கம் திரும்பியபோது திருகோணமலை நகர்ப்பகுதியில் இருந்து சுற்றுலா வந்த முச்சக்கர வண்டி காரொன்றுடன் மோதி பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கெப் ரக வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

இரு வாகனங்களுடன் மோதிய முச்சக்கர வண்டி; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயம்-Accident-5 Injured Including 3 Children

இவ்வாறு விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட சிறுவர்களின் தாய் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இரு வாகனங்களுடன் மோதிய முச்சக்கர வண்டி; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் காயம்-Accident-5 Injured Including 3 Children

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Sun, 02/13/2022 - 10:22

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை