2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி. எல்லை திறப்பு

அவுஸ்திரேலியா இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச எல்லையை திறந்துள்ளது. இது மகிழ்ச்சியான குடும்ப ஒன்றிணைவுகள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலகின் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலிய 2020 மார்ச் மாதம் எல்லையை மூடியது.

அவுஸ்திரேலியர்கள் மற்றும் மேலும் சிலருக்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் அவுஸ்திரேலியா அனுமதி அளித்தபோதும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நூற்றுக்கணக்கானோர் விமானங்களில் வந்த நிலையில் சிட்னி விமானநிலையத்தில் கண்ணீருடன் கூடிய ஒன்றிணைவுகளை காணமுடிந்தது. இதில் இரு முறை தடுப்பூசி பெற்றவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றபோதும் தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்கள் சொந்த செலவில் ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Tue, 02/22/2022 - 09:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை