2300 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

விரைவாக விடுவிக்க நிதியமைச்சு ஏற்பாடு

 

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய 2300 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் அவற்றை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கையில்:

மேற்படி கொள்கலன்களில் அரிசி,பருப்பு உட்பட பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு போன்றவற்றை விரைவாக விடுவிக்காவிட்டால் அவை பழுதாகிவிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றை மிக விரைவாக விடுவிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படி அத்தியாவசியப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 02/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை