ஈக்வடோர் தலைநகரில் வெள்ளம்: 11 பேர் பலி

ஈக்வடோர் தலைநகர் குவிடோவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு லா கஸ்கா மாவட்டத்தில் மலைப்பாங்கான வீதி ஒன்றில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய சேற்று நீர் மற்றும் இடிபாடுகளில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இழுத்துச் செல்லப்படுவது வீடியோ காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது.

இதில் 15 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கடும் மழையை அடுத்தே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அவசரசேவை பணியாளர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Wed, 02/02/2022 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை