தொழிற்சங்க போராட்டம் நடத்த GMOA சங்கம் முஸ்தீபு

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை மறுதினம் 3 ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு ஒன்றுக் கூடவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்தர இடமாற்ற பட்டியல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இன்று (01) முதல் அமுலாகும் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்தர இடமாற்ற பட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் தயாரிப்பு பணிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை