DFCC வங்கியின் புதிய தலைமை நிர்வாகியாக திமால்

DFCC வங்கி புதிய தலைமை நிர்வாக அதிகாரி திமால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 01 ஆம் திகதி முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள திமால்பெரேரா, வங்கியின் தலைமைத்துவ அணியில் 2017 ஜூனில் பிரதி தலைமை நிர்வாக அதிகாரியாக இணைந்து கொண்டதுடன், 2019 ஜூலையில் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டார்.

திமால்பெரேரா, ஒரு புத்தாக்கமான, செயல்சார்ந்த, தொழில்நுட்ப அறிவாற்றல் கொண்ட தொழில் முயற்சியாளர் என்பதுடன், நிதிச்சேவைகள் மற்றும் வங்கித்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.

இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலான அனுபவத்துடன் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் HSBC குழுமம், கட்டார் கொமர்ஷல் வங்கி, ஐக்கிய அரபு இராச்சியம் பார்க்கிளேஸ் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றில் பல்வேறு சிரேஷ்ட பதவி நிலைகளை வகித்துள்ளார்.

 

Wed, 01/05/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை