இரு தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவாகின

மூன்று அரசியல் கட்சிகள் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, புதிய இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு

முன்னணி ஆகிய மூன்று கட்சிகளே இவ்வாறு புதிதாக பதிவுசெய்யப்பட'டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதிய இலங்கை சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி மூன்று கட்சிகள் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 79 அரசியல் கட்சிகள் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 01/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை