நெதர்லாந்தில் கொரோனா உச்சம்: கட்டுப்பாடு தளர்வு

நெதர்லாந்து கொவிட்–19 கட்டுபாடுகளை தளர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு ஐரோப்பாவின் கடுமையான கொவிட் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தன.

இதன்படி நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக நெதர்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

நெதர்லாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையாக இந்த இடங்கள் ஒரு மாதத்திற்கு மேல் மூடப்பட்டதோடு கால் பங்கான ஆரம்பப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று சம்பவங்கள் முன்னர் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையிலேயே நெதர்லாந்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் தினசரி தொற்றுச் சம்பவங்கள் சுமார் 60,000ஐ தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் 90 வீதமானவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றபோதும், 57 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு முன்வந்துள்ளனர்.

Thu, 01/27/2022 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை