தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் வடக்கு தெற்கை ஒன்றிணைக்கவும் அடித்தளம்

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் அலி சப்ரி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்பாடுகளின் ஊடாக தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைப்பதற்கும் நல்ல அடித்தளத்தை அமைக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நடமாடும் சேவையுடன் இணைந்ததாக வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் 42 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைக்கான புதிய மூன்று மாடி கட்டடம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் தற்போதைய அரசாங்கம் வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமது மொழிகளில் பேசுவதற்கும் வாழ்வதற்குமான சூழலை உருவாக்கியுள்ளது. அவர்களின் கலாசாரங்களுக்கு ஏற்ப வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம் முதல் வடக்கு, தெற்கு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் செயற்படுகின்றனர். நாட்டின் அபிவிருத்திக்கு அமைதியும் நல்லிணக்கமும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டார்.  ஒரு குழுவாக இணைந்து செயற்படுவது ஒரு நாடு என்ற வகையில் சாதிக்க முடியாத சாதனையல்ல எனவும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் இந்த செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைப்பதற்கும் நல்ல அடித்தளத்தை அமைக்க முடியும் என்றார். உலக நாடுகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு எமது நாட்டுப் பிள்ளைகள் சர்வதேச மொழிகளிலும் கணனித் தொழில்நுட்பத்திலும் புலமைமிக்கவர்களாக மாற்றப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துவதும், அதுவே கடந்த காலத்திலிருந்து இருந்துவரும் ஒரு சிறந்த பண்பு எனவும் அவர் நினைவுபடுத்தினார். நல்லிணக்கத்திற்கு உகந்த இலங்கைச் சமூகச் சூழலை உருவாக்கும் நோக்கில் இக்கல்லூரிக்கு வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தமைக்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் பாராட்டு தெரிவித்ததோடு, அதன் தலைமைத்துவத்திற்காக நீதியமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன, மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு சமாந்தரமாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சின் செயலாளர், யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை