சகலவிதமான பிறழ்வுகளையும் கட்டுப்படுத்தும் திறன் எமக்குள்ளது

இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின்

--சுகாதாரத்துறை மீது எமக்கு பூரண நம்பிக்கை

இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இலங்கை சுகாதாரத்துறை மீது பூரண நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

சில தரப்பினரின் தவறான கருத்துகள் இருந்தபோதிலும் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இருப்பதாக சுட்டிக்காட்டினார். போதிய படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் இருப்புகள் இல்லை என சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைப்பு எந்த வகையிலும் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைப்பை உகந்த வகையில் செயற்படுத்தவும் மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் சேவைகளை வழங்கவும் முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை