வெலிமடை பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்

வெலிமடை பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்-New Building for Gampaha Welimada School-Senthil Thondaman

- பணிகளை நேரில் சென்று ஆய்வு

கம்பஹா - வெலிமடை பாடசாலையின் புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.

வெலிமடை பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்-New Building for Gampaha Welimada School-Senthil Thondaman

செந்தில் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் தரைத் தளம் மற்றும் முதலாம் மாடியின் நிர்மாணப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது மாடியை நிர்மாணிக்க ரூபா 11.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெலிமடை பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்-New Building for Gampaha Welimada School-Senthil Thondaman

கம்பஹா பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வகுப்பறைகள் பற்றாக்குறையாலும் மேலதிக மாடிகளை அமைத்து தருமாறு அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் மாடிக் கட்டிடம் செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 01/09/2022 - 14:52

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை