பெருந்தோட்ட கைத்தொழில்துறையால் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

அமைச்சர் ரமேஷ் பத்திரண

 

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானமாக பில்லியன் கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறப்பர் ஏற்றுமதி மூலம் ஒரு பில்லியன் அமெ. டொலரையும் தேங்காய் ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் அமெ. டொலரையும் வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் அமெ. டொலரையும் கடந்த வருடத்தில் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வருடத்தில் பயிர்ச்செய்கை செய்யக்கூடிய சகல நிலத்திலும் முழுமையாக ஏற்றுமதிக்கான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் இறப்பர் பால் சேகரிப்பில் மக்கள் முழுமையான கவனம் செலுத்தவில்லை. எனினும் தற்போது இறப்பர் கிலோவொன்றுக்கான விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. 200 - 300 ரூபாவுக்கு கடந்த காலங்களிலும் விற்பனை செய்யப்பட்ட மிளகு தற்போது சுமார் 1000 ரூபாவரை விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை