பாகிஸ்தான் எல்லை வேலி: தலிபான் எதிர்ப்பு

டூரன்ட் லைன் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வேலி அமைக்க இடமளிக்கப்போவதில்லை என்று ஆப்கானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவிவரும் எல்லை வேலி தொடர்பான பதற்றத்திற்கு மத்தியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'எந்த நேரத்திலும், எந்த அமைப்பிலும் வேலி அமைப்பதற்கு நாம் (தலிபான்) அனுமதிக்கப்போவதில்லை' என்று தலிபான் குழுவின் கட்டளைத் தளபதி மௌலவி சனாவுல்லா சங்கின் தெரிவித்தார்.

Sun, 01/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை