வெடிபொருள் ஏற்றிய லொரி பைக்குடன் மோதி ‘வெடிப்பு’

கானாவில் பலர் பலி: முழு நகரும் உருக்குலைவு

கானாவில் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லொரி, பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 17 உயிரிழந்தனர்.

இதில் 59 பேர் காயமடைந்திருப்பதோடு சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் துறை அமைச்சர் கோஜோ ஒபொங் ருமாஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் ஊரகப் பகுதியில் நடந்த இந்த விபத்தில் சுமார் 500 கட்டடங்கள் நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகாமைத்து நிறுவனத்தின் தலைமை பணிப்பாளர் செஜி சாஜி அமெடோனு கூறியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 சடலங்களைப் பார்த்ததாக வட்டார அவசரகால அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் ரோய்டர்ஸ் கூறுகிறது.

பொகோசோ - பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிரானோ பகுதியில் உள்ள மக்சாம் நிறுவனத்துக்கு சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது இந்த லொரி ஒரு மோட்டார் பைக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 

வெடி விபத்தால் பலர் உயிரிழந்து இருப்பது துயரமான சம்பவம் என்று கானா நாட்டின் ஜனாதிபதி நானா அகூபா அட்டோ வேதனை தெரிவித்துள்ளார்.

வெடி விபத்தால் ஆபியேட் நகரமே உருக்குலைந்து இருப்பது கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

Sat, 01/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை