ஒரே இரவில் மூன்று கோவில்களில் திருட்டு!

நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று ஆலயங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புகுந்த கொள்ளையர்கள் சுவாமி சிலையின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடியதுடன் உண்டியலை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதற்கு அடுத்துள்ள பச்சைபங்களா தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று விட்டனர்.

இதற்கு அடுத்து உருலேக்கர் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச்சென்று விட்டனர்.

அக்கரப்பத்தனை நகரத்திற்கு அடுத்தடுத்த தோட்டங்களில் ஓரே நாளில் மூன்று ஆலயத்தில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலய கொள்ளைகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடங்களுக்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Wed, 01/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை