கச்சதீவு திருவிழாவிற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி கிடையாது

கச்சதீவில் வருடந்தோறும் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவில் இலங்கை யாத்திரிகர்களும் இந்திய யாத்திரிகர்களும் பங்கேற்று வந்த நிலையில் இந்த தடவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கச்சத்தீவு புனித அந்தோணியாரின்  திருநாளைக் குறிக்கும் வகையில், வருடாந்த சமயக் கொண்டாட்டங்களில் கொவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு இந்திய யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கே.மகேசன் தலைமையில் யாழ்ப்பாண ஆயர் ஆர்.டி. அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், சுகாதார அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில், மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள இந்திய யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று க. மகேசன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 500 உள்ளூர் பக்தர்கள், இரண்டு அளவுகள் மற்றும் பூஸ்டரைப் பெற்றதற்கான தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தால், நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை கொவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக கடுமையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்திய யாத்ரீகர்கள், கச்சத்தீவு நிகழ்வில் பங்கேற்பதைத் தடுக்கும் முடிவிற்கு ராமேஸ்வரம் மோட்டார் படகு சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு, கச்சத்தீவு திருவிழா கொண்டாடப்பட்டபோது அதில் ​​3,000 இந்திய யாத்ரீகர்களும் 7,000 இலங்கை யாத்ரீகர்களும் பங்கேற்றனர்.

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை