கொரோன கட்டுப்பாட்டை மீறிய இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு

கொரோனா காட்டுப்பாடுகளை மீறி, ஊரடங்கு காலத்தில் மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டில் முழு ஊரடங்கு அமுலில் இருந்த போது, லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது அலுவலக தோட்டத்தில் நடைபெற்ற மது விருந்தில் பொரிஸ் ஜோன்சன் கலந்துக்கொண்டார்.

ஊரடங்கு விதிகளை மீறி பிரதமரே இவ்வாறு செய்ததற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள், அவர் பதவி விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மன்னிப்புக் கோரிய ஜோன்சன், விதிகளை உருவாக்குபவர்களே அதனை சரியாக பின்பற்றாதது குறித்து மக்கள் தன் மீது கொண்ட கோபத்தை புரிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Fri, 01/14/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை