நெல் பயிரிட முடியாத நிலங்களில் பாசிப்பயறு பயிரிட அரச உதவி

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பாசிப்பயறு பயிரிட அரச உதவி-Government Assistance for Green Gram Cultivation in Lands Where Paddy Cannot be Cultivated

- விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க ஜனாதிபதி பணிப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பாசிப் பயறு பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (21) கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட  முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பயறு பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி, விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Sun, 01/23/2022 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை