முல்லைத்தீவு வீராங்கனை இந்துவுக்கு தங்கப்பதக்கம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த அவர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

நேற்றுமுன்தினம் (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

Thu, 01/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை