ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தொடுக்கக் கூடும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதை தடை செய்வது குறித்த ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் பதற்றத்தை தணிப்பதற்கான ரஷ்யாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளார்.

நேட்டோவுடன் ஒருங்கிணைந்து பிளின்கன் வழங்கி இருக்கும் பதிலை பரிசீலித்து தமது நாடு பதிலளிக்கும் என்று ரஷ்ய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ரஷ்யா கோரிக்கைகளை விடுத்திருந்தது. இதில் உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகள் அந்தக் கூட்டணியில் இணையும் சாத்தியத்தை நிராகரிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரி இருந்தது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையை ஒட்டி ரஷ்யா அண்மைய வாரங்களில் படைகளை குவித்திருப்பது மேற்கு நாடுகளின் கவலைக்கு காரணமாகியுள்ளது. ரஷ்யா ஆக்கிரமிப்பு ஒன்றுக்கு தயாராவதாக கூறப்பட்டபோதும் அதனை ரஷ்யா மறுத்துள்ளது.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை