டொங்காவில் எரிமலை சாம்பலை நீக்க முயற்சி

பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் நடந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட டொங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

உணவு, குடிநீர் மற்றும் பிற அடிப்படை பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இதனால் தாமதம் அடைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்புக்கு பின் நடந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கப்பல்களை அனுப்பியுள்ளன.

சுனாமி காரணமாக டொங்காவில் மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் பிரிட்டன் நாட்டு பெண் ஒருவரும் அடங்குகிறார்.

எரிமலை வெடிப்பால் உண்டான புகை 20 கிலோ மீற்றர் உயரத்துக்கு எழும்பியது என்று டொங்கா அரசு தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு நீர் மற்றும் உணவு ஆகிய அவசர உதவிகளை ஏற்றிய டொங்கா கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Thu, 01/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை